Breaking News

முகக்கவசத்துக்குள் (Mask) ஹெரோயின் கடத்திய இராணுவ வீரர் கைது!

முகக்கவசத்துக்குள் (Mask) ஹெரோயின் கடத்திய இராணுவ வீரர் கைது!

பனாகொடை இராணுவ முகாமில் விசேட அவசரகால பணிகளில் ஈடுபடுவருதாகத் தெரிவித்து, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஹெரோயின் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிட்மிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் களுத்துறை வலய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று (28) கைப்பற்றப்பட்டது

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் ஒன்றின் அடிப்படையில் களுத்துறை, ரஜவத்தை சந்தியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபரை இடைமறித்து நடத்திய விசாரணையின் போது இராணுவ விசேட அவசரகால பணிகளுக்காக செல்வதாகக் கூறி போலி ஆவணங்களை பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக சோதனையின் போது முககவசத்தில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 10 கிரேம் ஹெரோயின் போதைப் பொருள், இராணுவ அதிகாரிகளுக்கு கட்டளையிடல் படைப் பிரிவுக்கான (rubber seal) பதவி முத்திரை ஒன்று, இராணுவ அடையாள அட்டைகள் இரண்டு, விடுமுறை அனுமதிப்பத்திரம், கைத்தொலைபேசி இரண்டு, ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுக்காக பாவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

களுத்துறை சேருபிட்டை பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக நடவடிக்கைகளை களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619ஆக அதிகரிப்பு

Today rasi palan 29.04.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 29 ஏப்ரல் 2020 புதன்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …