Breaking News
மும்தாஜ் உண்மையாவே

மும்தாஜ் உண்மையாவே டிராமா குயீன் தானா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற போட்டியாளர் மும்தாஜ். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் அவரது போலித்தனத்தை காட்டுவதாக ஹவுஸ்மேட்ஸ் புறம்பேசி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ்

இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே வலுவான போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மும்தாஜ்.

தாயுள்ளம் கொண்ட அவரது பண்பும், அடுத்தவர்களின் கஷ்டத்தில் ஆறுதல் கூறுவது அவரது இயல்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மும்தாஜ் தனது அன்பு, பாசத்தினால் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்லாமல் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து தப்பிக்க போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகிறது.

மொட்டை அடிப்பது, முடி வெட்டுவது, ஹேர் கலரிங் செய்வது, டாட்டூ போடுவது என பல்வேறு சுவாரஸ்யங்கள் பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் சூழலில், ரித்விகா அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், மும்தாஜின் முடிக்கு கலரிங் செய்ய வேண்டும் என கட்டளை வருகிறது

இதனை கேட்ட மும்தாஜ் என் அம்மாவுக்காக இருந்தாலும் கூட முடியில் நான் எதுவும் செய்ய மாட்டேன் என தனது முடிவில் தீர்க்கமாக இருக்கிறார்.

இந்நிலையில், ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் அன்பு காட்டுவது, பாசமாக பேசுவது எல்லாம் நடிப்பு, மும்தாஜின் போலித்தனம் தெரிந்துவிட்டது.

பிறருக்காக எதையும் செய்பவர் முடி விஷயத்தில் கறாராக இருப்பதன் மூலம், மும்தாஜின் உண்மை கேரக்டரை மக்கள் புரிந்துக் கொள்வார்கள்.
திடீர் விசிட் அடித்த அம்மா
இனி அவரது பாச வேஷம் செல்லுப்படியாகாது என தங்களுக்குள் ஹவுஸ்மேட்ஸ் பேசிக் கொள்கின்றனர்.

ரித்விகாவுக்காக மும்தாஜ் மனமிறங்குவாரா அல்லது ரித்விகாவை டீலில் விடுவாரா என்பது தெரியவில்லை.

மும்தாஜ் டாஸ்க்கை ஏற்கவில்லை என்றால், மும்தாஜ் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பிக்க யாரும் எந்த டாஸ்க்கையும் செய்ய மாட்டார்கள் என்பதால் மும்தாஜ் தனது முடிவில் திடமாக இருப்பாரா அல்லது பின் வாங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …