சமையல் குறிப்புகள்முக்கிய செய்திகள்

ரவா லட்டு செய்வது எப்படி…?

தேவையான பொருட்கள்:

ரவை – ½ கிலோ
சர்க்கரை – ½ கிலோ
நெய் – 50 கிராம்
முந்திரி பருப்பு – 50 கிராம்
தேங்காய் – 1
ஏலக்காய் – 12
பால் – 250 மில்லி லிட்டர்

செய்முறை:

முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும்.

ஓரளவு சர்க்கரையின் அளவு சின்ன ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்

பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம். சுவையான ரவா லட்டு தயார்.

இன்றைய ராசிப்பலன் 05 ஜப்பசி 2019 சனிக்கிழமை

சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites

Tags
Show More

Related Articles

Back to top button
Close