Breaking News
Home / சமையல் குறிப்புகள் / முளைகட்டிய வெந்தயக் கறி எப்படி செய்வது
முளைகட்டிய

முளைகட்டிய வெந்தயக் கறி எப்படி செய்வது

Spread the love

தேவையான பொருட்கள்

முளைகட்டிய வெந்தயம் – 3 டீஸ்பூன்,
வேகவைத்த துவரம்பருப்பு – 50 கிராம்,
தேங்காய்த் துருவல், – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை:

முளைகட்டிய வெந்தயத்தை வேகவிட்டு எடுக்கவும் (குக்கரில் சாதம் வைக்கும்போது, மேல் தட்டில் வைத்து வேகவிடலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து… தேங்காய்த் துருவல், வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, வேகவிட்ட வெந்தயம் சேர்த்து, உதிர் உதிராக வரும் வரை நன்கு புரட்டி எடுத்துப் பரிமாறவும். வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், சர்க்கரை இவை மூன்றும் சேர்ந்து வெந்தயத்தின் கசப்பை வெகுவாகக் குறைத்துவிடும்.

Check Also

சுவையான

சுவையான பக்கோடா குழம்பு செய்ய!

Spread the loveதேவையான பொருள்கள்: கடலை பருப்பு – கால் கிலோ பூண்டு – 3 பல் இஞ்சி – …