Breaking News
Home / சமையல் குறிப்புகள் / ஹைதராபாத் வெஜ் பிரியாணி எப்படிச் செய்வது
ஹைதராபாத்

ஹைதராபாத் வெஜ் பிரியாணி எப்படிச் செய்வது

தேவையானப்பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்,
தயிர் – ஒன்றரை கப்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),
நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், நூல்கோல் (எல்லாம் சேர்ந்து) – ஒரு கப்,
கொத்தமல்லி – சிறிதளவு,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


அரைக்க:

பச்சை மிளகாய் – 6,
முந்திரிப்பருப்பு – 4,
சின்ன வெங்காயம் – 10,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் (மூன்றும் சேர்த்து) – ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி (இரண்டும் சேர்த்தது) – கால் கப்.


செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் – நெய் விட்டு சூடாக்கி…

நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், நூல்கோல் போட்டு வதக்கி, இறுதியில் இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, பாசுமதி அரிசியையும் உப்பையும் சேர்த்து, தயிருடன் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கி சேர்த்து, குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.

ஆவி வெளியேறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 23 பங்குனி 2019 சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 23-03-2019, பங்குனி 09, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சித்திரை …