Breaking News
தமிழகத்தில் கொரோனா பலி 479 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பலி 479 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பலி 479 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனாவின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தஞ்சம் அடைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இந்த 100 நாட்களில் 479 பேரின் உயிரை கொரோனா பறித்து உள்ளது. அதிகபட்சமாக நேற்று 44 உயிர்கள் பறிபோய் உள்ளது.

44 பேர் மரணம்

இந்த நிலையில் தமிழகத்தின் 100-வது நாள் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 18 ஆயிரத்து 403 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 1,132 ஆண்கள், 710 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என 1,843 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 13 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேரும் உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 92 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 307 முதியவர்களும் இடம் பெற்று உள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 46 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 32 பேரும், தனியார் 12 பேர் என மொத்தம் 44 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 35 வயது பெண் உட்பட 35 பேரும், திருவள்ளூரில் 32 வயது ஆண் உட்பட 5 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், கிருஷ்ணகிரியில் ஒருவரும் அடங்குவர். நேற்றைய இறப்பு பட்டியலில் 13 பெண்கள் உள்ளனர்.

20,678 பேருக்கு சிகிச்சை

தமிழகத்தில் இதுவரையில் 479 பேரின் உயிரை கொரோனா பறித்து உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 382 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 27 பேரும், காஞ்சீபுரத்தில் 7 பேரும், விழுப்புரத்தில் 5 பேரும், திருவண்ணாமலை, மதுரையில் தலா 4 பேரும், வேலூரில் 3 பேரும், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடியில் தலா 2 பேரும், விருதுநகர், திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், கோவை மற்றும் விமான நிலைய கண்காணிப்பில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 797 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். இதுவரை 25 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 20 ஆயிரத்து 678 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

32 மாவட்டங்களில்…

தமிழகத்தில் நேற்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேரும், செங்கல்பட்டில் 120 பேரும், திருவள்ளூரில் 50 பேரும், காஞ்சீபுரத்தில் 40 பேரும், தூத்துக்குடியில் 38 பேரும், ராணிப்பேட்டையில் 37 பேரும், மதுரை, திருவண்ணாமலையில் தலா 33 பேரும், கடலூரில் 27 பேரும், நெல்லையில் 25 பேரும், வேலூரில் 21 பேரும், விழுப்புரத்தில் 13 பேரும், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சியில் தலா 12 பேரும், தேனி, புதுக்கோட்டையில் தலா 11 பேரும், நாகப்பட்டினம், திருவாரூரில் தலா 10 பேரும், விருதுநகர், சிவகங்கையில் தலா 9 பேரும், தென்காசி, திருச்சியில் தலா 8 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், கோவை, நீலகிரி, சேலத்தில் தலா 3 பேரும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூரில் தலா 2 பேரும், திருப்பத்தூர், கரூர், அரியலூரில் தலா ஒருவரும் இடம் பிடித்து உள்ளனர்.

நேற்றைய தினம் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

About அருள்

Check Also

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா …