Breaking News

மட்டனுக்காக மனைவியை இப்படி போய் செய்யலாமா…!

கணவனுக்கு மனைவி குறைவாக மட்டன் சாப்பிட கொடுத்தால் ஆத்திரமடைந்த கணவன் அந்த பெண்ணை எரித்து உள்ள அதிர்ச்சி சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

மும்பையில் கோமதே என்ற கிராமத்தில் வசிக்கும் மாருதி சரோத் என்பவரும் அவரது மனைவி பல்லவி இருவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

இவர்களுக்கு 4 குழந்தை உள்ளனர். இந்நிலையில் கணவன் வேலை முடித்துவிட்டு இரவில் உணவு சாப்பிட அமர்ந்துள்ளார், அப்போது, பல்லவி, கணவனுக்கு உணவு பரிமாறும் போது குறைவான அளவு மட்டன் வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரோத் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

ஒருகட்டத்திற்கு மேல் சண்டை முற்றி போக மனைவியின் மேல் சரோத் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளார்.

தற்போது மனைவி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சம்பிக்கவுக்கு மறியல் நீடிப்பு! – வெலிக்கடைச் சிறையில் அடைப்பு

About அருள்

Check Also

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுடன் நேற்று …