Breaking News
Home / தமிழ் கவிதைகள் / கண்ணீர் விட்டு கதறுகிறேன்
கண்ணீர் விட்டு கதறுகிறேன்

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 25
    Shares

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

பத்து மாசம் சுமந்து பெத்த
பாசத்தாயி கதறுறா
பாசங்கொடுத்து பறிகொடுத்த
பாவிதந்தை அழுவுறான்

அழுது புலம்பும் அண்ணன் அங்கே
என்ன செய்ய எம்புதல்வா
ஏக்கத்தோடு காத்திருந்தோம்
ஏமாற்றி போய்விட்டாயே

நீயில்லா வீடு நிலமில்லா வீடு
நீயில்லா பொழுது நிரைகனவு பொழுது
நீயில்லா வாழ்வு
எப்படி நான் போகப் போறேன்

நீ குடிச்ச பால்புட்டி
பரிதவித்து நிக்கிதடா
நீ நடந்த கால் தடங்கள்
அழியாம இருக்குதடா

எஞ்செல்லம் என்உசுரே
கதறியழுது புலம்புகிறோம்
கண்ணத்திறந்து பார்த்துவிடு
காப்பாத்த முடியாம
கதறியழுது புலம்புகிறோம்.

மணியன்கலிய மூர்த்தி


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 25
    Shares

Check Also

சோறு போடுவான் சொந்த மகன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!25Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள!25Shares