Breaking News
விஜயலக்ஷ்மிக்கு

விஜயலக்ஷ்மிக்கு இந்த டாஸ்க் தான் ரொம்ப பிடிச்சதாம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே சென்றுள்ள விஜயலக்ஷ்மி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஹிட்லர் டாஸ்க் தான் பிடித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரி ஆரம்பமாகியுள்ளது. இதில் முதலாவதாக நடிகை விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

விஜயலக்ஷ்மி குறிப்பிட்ட சில போட்டியாளர்களிம் இந்த பேச்சும் வைத்துக் கொள்ளாமல் மற்றொரு அணியினருடன் கூடிக்குலாவி வருகிறார்.

விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னர் வெளியாகியுள்ள புரொமோ வீடியோக்கள் மூலம், அவர் தனக்கு மனதில் படுவதை வெளிப்படையாக பேசும் தன்மை உடையவர் என தெரிகிறது.

இன்றைய நிகழ்ச்சி குறித்த புரொமோவில், இதுவரை பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்குகளில் எது உங்களுக்கு பிடித்திருந்தது என டேனி விஜயலக்ஷ்மியிடம் கேட்கிறார். அதற்கு துளியும் யோசிக்காமல், தனக்கு ஹிட்லர் டாஸ்க் தான் மிகவும் பிடித்திருந்து என விஜயலக்ஷ்மி கூறுகிறார்.

ஹிட்லர் டாஸ்க்கில் சர்வாதிகார ராணியாக வந்து பிக் பாஸ் வீட்டை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆட்டிப்படைத்தார் ஐஸ்வர்யா. அந்த டாஸ்க் மிகவும் என்கேஜாக இருந்ததாக விஜயலக்ஷ்மி கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த ஒரு டாஸ்க்கை தவிர மற்ற அனைத்தும் மொக்கை என்பதை சொல்லாமல் விஜயலக்ஷ்மி சொல்லிவிட்டார் என நெட்டிசன்கள் ட்வீட்டி வருகின்றனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …