Breaking News
பாராளுமன்றத்தை கூட்ட மாட்டேன்

பாராளுமன்றத்தை கூட்ட மாட்டேன்

பாராளுமன்றத்தை கூட்ட மாட்டேன்

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தான் அதனை செய்ய மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையேற்படின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த தயங்க மாட்டேன் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத் திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன். அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது.

பாராளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்த மானியை விடுத்து மீண்டும் கலைப்பேன்.

இந்த பாராளுமன்றின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப் படிச் செய்யலாம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசியலமைப்பின்படி என்ன செய்ய முடியுமோ அதனை நான் செய்வேன்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் வாள்வெட்டு

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …