Breaking News

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை என்றும் கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும். தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

மேலும், கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை என்றும் ஆரம்பக்கால அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும்.

வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது

About அருள்

Check Also

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார் பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து முதலமைச்சரே ஆய்வு நடத்தி இறுதி …