Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஐ.பி.எஸ்

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகத்தின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை காவல் தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,

சென்னை மயிலாப்பூர் காவல்துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்னை சிபிசிஐடியின் இணைய குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பியாக ஜெயலட்சுமியையும், மத்திய மண்டல ஐ.ஜியாக அமல்ராஜ் என்பவரையும், திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக வரதராஜூ என்பவரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

Check Also

கடலூரில்

கடலூரில் கூவிக்கூவி பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!7Shares கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது மீண்டும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. …