Breaking News

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் – இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் – இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது.

60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.

3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவுகள், தடுப்பூசி கண்டுபிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை

About அருள்

Check Also

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு உலகளவில் கொரோனா தடுப்பூசி பரவலாக …