Breaking News
இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம்

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம்

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம்

மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றார்.

இந்த கூட்டத்தின் நடுவே அவர் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளை அடுத்தடுத்து சந்தித்து, இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தை ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் நடத்தினார். இதில், இந்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர், லடாக் மோதல் வலுத்து வருகிற நிலையில் சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் நிலவும் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லையில் தற்போது நிலவும் சூழல், இருநாடுகளின் நலனுக்கும் உகந்தது அல்ல என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …