இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

அணு ஆயுத ஏவுகனையை பரிசோதனை செய்கிறது இந்தியா

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ள அணு ஆயுத ஏவுகணை நாளை மறுதினம் பரிசோதனை செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கே4 அணு ஆயுத ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை கடந்த அக்டோபர் மாதம் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அப்போது பரிசோதனை செய்யப்படவில்லை. இந்நிலையில் கே 4 அணு ஆயுதம் நாளை மறுநாள் பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் வைத்து பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கே 4 அணு ஆயுதம் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சுமார் 3500 கி.மீ. தூரம் வரை பாய்ந்து தாக்கும் சக்திவாய்ந்தது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க :

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மலர்ந்த மலர்கள்

Tags
Show More

Related Articles

Back to top button
Close