Saturday , April 20 2019
Home / இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

Indian News

உச்சநீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் – கடிதம்

உச்சநீதிமன்ற நீதிபதி

உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கோர்ட்டின் கடைநிலை ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டெண்டாக சில ஆண்டுகள் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச …

Read More »

மக்கள் மனங்களில் நான் இருக்கிறேன்; வெற்றி வாய்ப்பு பிரகாசம்

வெற்றி

நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று வாக்களித்த பின தனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் புத்தாண்டு அன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும் தன்னை மதச்சார்பற்ற கட்சிகள் யாவும் பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் …

Read More »

வாக்கு இயந்திரம் பழுதான இடங்களில் வாக்குப்பதிவை நீட்டிக்க காங். வலியுறுத்தல்

வாக்கு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. சில வாக்குச்சாவடிகளில் மணிக்கணக்கில் தாமதம் ஆனதால், வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் …

Read More »

சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி

பாஜக

சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏ மற்றும் 5 பாதுகாப்புப் படையினரைக் கொன்ற நக்சலைட்டுகள் இன்று கொல்லப்பட்டனர். நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் கடந்த 9 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பகுதி பாஜக எம்.எல்.ஏ, பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பகுதியில் …

Read More »

வினோத தண்டனை கொடுத்த மனித மிருகங்கள்!!!

வினோத

மத்தியபிரதேசத்தில் மாற்று சாதி வாலிபரை காதலித்து திருமணம் கொண்டதற்காக மனித மிருக கும்பல் ஒன்று இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் 20 வயது இளம்பெண் ஒருவர் வேறு சாதி இளைஞரை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனையறிந்த அதே ஊரை சேர்ந்த மனித மிருக கும்பல் ஒன்று அந்த இளம்பெண்ணை தனது காதல் கணவனை தோளில் சுமந்தபடி நீண்ட தூரம் நடந்து …

Read More »

மிடுக்கான நடையுடன் இந்திய எல்லைக்குள் இன்றிரவு அடியெடுத்துவைத்தார் அபிநந்தன்!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பில் இந்திய ஊடகமான ‘தினத் தந்தி’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பரசூட்டில் இறங்கினார். பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். …

Read More »

பாகிஸ்தான் படையிடம் மாட்டிய இந்திய விமானி நாளை விடுவிப்பு!

பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்ட இந்திய விமானப் படை வீரர் நாளை விடுவிக்கப்படவுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தமைக்குப் பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின்போது இந்தியப் போர் விமானங்களை இரண்டை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்போது ஒரு விமானப் படை வீரர் உயிரிழக்க மற்றொரு …

Read More »

எல்லையில் போர்ப் பதற்றம்! எதுவும் திடீரென நடக்கலாம்!! – இந்தியா எச்சரிக்கை

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்குள் புகுந்து எப்படி அமெரிக்கா ஒசாமா பின்லேடனை கொன்றதோ அதேபோன்றுதான் இந்தியாவும் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளை அழித்துள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படை விமானம் இந்தியாவுக்குள் நுழைந்து ரஜோரி செக்டாரில் இந்திய இராணுவ …

Read More »

பதற்றத்தையடுத்து இந்தியா – பாகிஸ்தான் வான்பகுதியில் விமான சேவைகள் பாதிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் வான்பகுதியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச விமானங்கள் சில திரும்பிச் சென்றுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியுள்ளது. பாகிஸ்தான் தன்னுடைய பிராந்தியம் முழுவதும் விமான சேவையை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. டில்லிக்கு வடக்குப் பகுதியில் விமானப்படை விமானங்கள் தவிர பிற விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே …

Read More »

பாகிஸ்தான் பதிலடி! சுட்டு வீழ்த்தப்பட்டன 2 இந்திய போர் விமானங்கள்!! – ஒரு விமானி சிறைப்பிடிப்பு

பதிலடி நடவடிக்கையாக 2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் விமானி ஒருவரைக் கைதுசெய்ததாகவும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். புல்வாமா தக்குதலுக்குப் பழிக்கு பழிவாங்க இந்திய இராணுவத்தினர், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்குப் பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் கிலோ …

Read More »