Breaking News
இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு

இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு

இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு

சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, அங்கு பல்வேறு நகரங்களில் படித்து வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவசர அவசரமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினார்கள். இதேபோல் இந்திய மாணவர்களும் தாய்நாடு திரும்பினார்கள்.

இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்ப அந்த நாடு அனுமதி மறுத்து உள்ளது.

இது தொடர்பாக சீன கல்வி அமைச்சகம் தனது இணையதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், தாங்கள் படிக்கும் மற்றும் வேலைபார்க்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து முறையான அழைப்பு கடிதம் கிடைக்காத வெளிநாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் அடுத்த தகவல் வரும் வரை தங்கள் கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கழகத்துக்கோ வரவேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது சீனா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்திய மாணவர்கள் சீனா திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதை, பீஜிங் நகரில் உள்ள இந்திய தூதரகம் அந்த நாட்டின் கல்வி அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளது.

இந்த தகவலை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், வெளிநாட்டு மாணவர்கள் திரும்பும் பிரச்சினையில் சீன அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக காத்து இருப்பதாக கூறி இருக்கிறது.

பசிபிக் பிராந்தியத்தில் சீனா ராணுவ செல்வாக்கை வேகமாக விரிவுபடுத்துகிறது

குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …