Breaking News

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் ஷங்கர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறினேன். இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நோர்வேயில் 25 பேருக்கு கொரோனா தொற்று – அண்மைய செய்தி

Today rasi palan 03.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 03 மார்ச் 2020 செவ்வாய்கிழமை

150 பேருக்கு ஜெர்மனியில் கொரோனா உறுதி

சிறுமியை ஆசைகாட்டி மோசம் செய்த இளைஞர்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 4000 உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …