Wednesday , January 16 2019
Home / உலக செய்திகள் / ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து
ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து

ஆப்கானிஸ்தான் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது படாக்‌ஷான் என்ற மாகாணம்.

இங்குள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

தங்கம் கிடைப்பதாக நம்பிய உள்ளூர்வாசிகள் அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களாகவே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு தோண்டப்பட்ட சுமார் 200 அடி ஆழ சுரங்கத்திற்குள் சிலர் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக சுரங்கம் திடீரென்று உள்பக்கமாக மளமளவென சரிந்து விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வந்த மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மருத்துவ உதவிக்குழுவும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே உள்ளூர் மக்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

Check Also

வாழைச்சேனையில் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் …