இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை!

- மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை!

“போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து அரசு விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாக் கூட்டத் தொடரில் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே ஜோன் பிஷர் தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் எவரும் ஏமாறக்கூடாது. போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றுள்ளது.

உலகை அழிக்க போகும் கொரோனா

கொரோனா வைரஸ் இந்தியா குறித்து அமெரிக்க உளவு அமைப்பு கவலை

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]
Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close