Breaking News
ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்!

ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்!

ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்!

ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது.

இதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது. எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ட்ரம்ப் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ளவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் இந்த விடயம் மிகப்பெரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

ட்ரம்பிற்கும் மற்றவர்களுக்கும் ஈரான் ஒரு சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்போலுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த அளவிலான கைது கோரிக்கையை பிரதிபலிக்கிறது.

உள்ளூர் அதிகாரிகள் மூலம் நாட்டின் சார்பாக கைது செய்ய முடியும் என்றாலும், இதில் சர்வதேச தலையீடு இருப்பதாக கூறப்படுகின்றது.

சந்தேக நபர்களை கைது செய்யவோ அல்லது ஒப்படைக்கவோ நாடுகளை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கத் தலைவர்களை அந்த இடத்திலேயே நிறுத்தி சந்தேக நபர்களின் பயணத்தை மட்டுப்படுத்தலாம்.

இது குறித்து தெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்காசிமெர் கூறுகையில், ‘ஜெனரல் காஸ்ஸெம் சோலேமானீயைக் கொன்ற சம்பவத்தில் ட்ரம்ப் மற்றும் குற்றம் சாட்டிய 30இற்க்கும் மேற்பட்டோர் கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்’ என கூறினார்.

ஆனால், ஈரான் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் தனது வழக்கைத் தொடரும் என்று வலியுறுத்தினார்

இந்த கோரிக்கையைப் பெற்ற பிறகு, இன்டர்போல் குழு மூலம் சந்தித்து அதன் உறுப்பு நாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்று விவாதிக்கிறது. எந்தவொரு அறிவிப்பையும் பகிரங்கப்படுத்த இன்டர்போலுக்கு எந்தத் தேவையும் இல்லை. இருப்பினும் அதன் இணையதளத்தில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் படி, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையாக இவர்கள் குறிவைக்கப்பட்டதாக பின்னர் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்தது.

முகக்கவசங்களில் வேட்பாளர்களின் சின்னம்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

About அருள்

Check Also

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற …