Breaking News
அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் காசிம் சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30 பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.

இதனிடையே காசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததாக மவ்சாவி மஜித் என்பவரை கடந்த மாத இறுதியில் ஈரான் போலீசார் கைது செய்தனர்.

ஈரானின் ராணுவ ரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகளுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஈரான் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் மவ்சாவி மஜித்துக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை ஈரானின் நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி ; இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம்

About அருள்

Check Also

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் …