உலக செய்திகள்முக்கிய செய்திகள்

அமெரிக்கா மீது மீண்டும் தாக்கிய ஈரான்: பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரான் நாட்டின் தளபதி சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் சுட்டுக் கொன்றதற்கு பழி வாங்கும் வகையில் சமீபத்தில் இராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 80 அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் அமெரிக்க இதனை உறுதி செய்யவில்லை
இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சமாதான பேச்சுக்கு ஈரான் முன்வந்தது.

எனவே போர் பதட்டம் குறைந்து வந்த நிலையில் திடீரென தற்போது மீண்டும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் நாட்டு ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 4 அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்து இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியான போதிலும் மற்ற சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை

ஏற்கனவே உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டுக் கொன்று விட்டோம் என ஈரான் அறிவித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு நிச்சயம் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் இந்த பதிலடியால் உலகப் போர் மூளும் வாய்ப்பு உள்ளது என்றும் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன

போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது

Tags
Show More

Related Articles

Back to top button
Close