உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஈராக்கை வாய்மொழியாக எச்சரித்த ஈரான்

தாக்குதலுக்கு முன் ஈராக்கை ஈரான் வாய்மொழியாக எச்சரித்து உள்ளது.

சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத்தளத்திலும், ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள எர்பில் தளத்திலும் ஈரான் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் கியாம் -1 மற்றும் ஃபதே -110 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது. இது 500 மைல் தொலைவு சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை. மேலும் 750 பவுண்ட் வெடிமருந்துகளை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது ஆகும்.

தாக்குதல் தொடுக்கப்பட்ட தெஹ்ரானுக்கும் ராணுவ தளங்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 1000 மைல் ஆகும்.

ஃபதே -101 என்பது ஈரானில் வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர, மேற்பரப்பில் இருந்து மேல் நோக்கி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையாகும், இது எந்த இடத்திலிருந்தும் ஏவலாம். பாலிஸ்டிக் ஏவுகணை என்பது ராக்கெட் மூலம் இயக்கப்படும், சுய வழிகாட்டும் மூலோபாய ஆயுத அமைப்பு ஆகும்.

இந்த ஏவுகணையின் மூலம் ரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும். விமானம், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடியும்.

நிலத்தை அடிப்படையாகக் கொண்ட குழிகள் மற்றும் மொபைல் வாகனங்களில் இருந்தும் இதை ஏவலாம்.

கியாம் -1 குறிப்பாக மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களை குறிவைத்து கட்டப்பட்டது ஆகும். இது ஈரானை சுற்றிலும் நிறுவப்பட்டு உள்ளது.

இரண்டு ஏவுகணைகளும் ஈரானில் உள்ள தப்ரிஸ் மற்றும் கெர்மன்ஷா மாகாணங்களில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க தளங்களின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈராக்கியர்களிடமிருந்து ஈராக் வாய்மொழி எச்சரிக்கையைப் பெற்று உள்ளது.

ஈரானிய தரப்பிலிருந்து ஈராக்குக்கு தகவல் கிடைத்ததும், “தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க” ஈராக் இராணுவத் தலைவர்களை எச்சரித்ததாக ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி கூறி உள்ளார்.

அப்துல் மஹ்தி நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், போர் ஏற்படாமல் இருக்கவும் தேவையான உள் மற்றும் வெளி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். போர் ஏற்பட்டால் ஈராக் பிராந்தியமும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்கும் என பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.

இன்றைய ராசிப்பலன் 09 சனவரி 2020 வியாழக்கிழமை – Today rasi palan 09.01.2020 Thursday

ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவதிகள் பலி

Tags
Show More

Related Articles

Back to top button
Close