இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

பெண்களை பணக்காரனோ… எம்.எல்.ஏ.,வோ வன்புணர்ந்தால் பரவாயில்லையா..?

உன்னாவ் சம்பவத்தையும், ப்ரியங்கா ரெட்டி மரணத்தையும் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமதாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’நான் வாழ விரும்புகிறேன், என்னை காப்பாறுங்கள் – எரித்து கொல்லப்பட்ட உன்னாவ் பெண் இறுதியில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள்.

அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. போலீஸ், அரசு என எல்லா அமைப்புக்களும் அவரை கைவிட்டன. இது திடீரென ஒரு இரவில் நடந்துவிடவில்லை.

அவரை காப்பாற்ற ஆயிரம் வாய்ப்புக்கள் இருந்தும் ஒரு நாடே அவர் சாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறது.

அவர் உடலில் பற்றிய தீயோடு ஒரு கிலோமீட்டர் உதவி கேட்டு ஓடிவந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. அப்படியானால் அது நாம் செய்த கொலை.

இது குறித்து எந்த அவமான உணர்வும் பொது வெளியில் இல்லை. ஊடகங்கள் வெட்றா அவன, போடுறா அவனை என கூக்குரலிடவில்லை.

ஆனால் பிரியங்கா ரெட்டிக்கு மட்டுமே அப்படி ஒரு குரல் வெட்கமின்றி ஒலிக்க முடிகிற ஒரு சூழல் உங்களுக்கு அவமானமானதாக தோன்றவில்லையா? உங்கள் குழந்தைகளை ஒரு பணக்காரனாலோ, ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாலோ இல்லை மதவெறியனாலோ வன்புணரப்பட்டால் பரவாயில்லையா?

வழக்கு பதியவும், பாதுகாப்பு கேட்டும் கதறியவர் இப்போது 90 சதவிகித தீக்காயத்தோடும்கூட என்னை காப்பாற்றுங்கள் என நம்மை பார்த்து இறைஞ்சுகிறார். அந்த பெண்ணின் “நம் மீதான நம்பிக்கை” உங்கள் இதயத்தை அறுக்கவில்லையா?

[poll id=”2″]

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/VLFDcUCsPW4

Tags
Show More

Related Articles

Back to top button
Close