Breaking News
Home / உலக செய்திகள் / ஜப்பானில் சாதி இல்லையா?
ஜப்பானில் சாதி இல்லையா?

ஜப்பானில் சாதி இல்லையா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை.இந்தியாவைப் போல தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியது ஜப்பான் நாட்டிலும்.

கீழ் சாதி என்ற வார்த்தைக்கு பதிலாக ஜப்பானிய மொழியில் ‘புராக்குமீன்’ (Burakumin) என்று கூறி ஒரு பகுதி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்தியாவில் இருப்பது போல அந்த மக்களை “சேரி” களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்.

அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது. அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது அந்நாட்டின் உயர்குடி மக்களால்.

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு. மக்கள் தொகை குறைந்து போக,

பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது அந்நாடு.
ஜப்பான் இனி அவ்வளவு தான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது அந்த வேளையில்.

காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக இருந்து, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் “ஹிரோஹிட்டோ’ (Hirohito) ஹீரோஷிமா நாகசாகி அனுகுண்டு விபத்திற்கு பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி கொண்டார்.

பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது.
ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே ‘ஜப்பானியர்’ என்ற சொல்லை தவிர ‘நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்’ போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது.

பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது. விடுமுறைகளை குறைத்தது. புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது. ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது. சாதிய புனைப்பெயர்களை அழித்தது.

உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது.

அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது. முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது.

“ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது”(Made in Japan) என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை.

நாடு மெல்ல மெல்ல முன்னேறியது.இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைதி செய்து கடுமையாகக் தண்டித்தது.ஆன்மீகத்தை விட அறிவியல் சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது.

கலப்பு சாதி திருமணங்களை வலு கட்டாயமாக்கியது.சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி? சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது.

சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன்
இரத்தமும் ஆண்ட சாதியான சாமூராய் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது..

விளைவு…?

இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌.

“புராக்குமீன்” என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌ ……

இந்தியா இந்த நிலையை அடைய எத்தனை லட்சம் ஆண்டுகளை எடுத்துக் கொள்ள போகிறதோ…

இதையும் பாருங்க :

சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

கொழும்பு

கொழும்பு அரசியலில் மீண்டும் குழப்பம்! உள்நாடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares புதிய பிரதமர் , மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு …