Saturday , July 21 2018
Breaking News
Home / TamilFood / சுவையான யாழ்ப்பாண தோசை

சுவையான யாழ்ப்பாண தோசை

தேவையான பொருட்கள் :
* கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
* அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
* அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
* வெந்தயம் – 1 தே. கரண்டி
* சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
* மிளகு – 1/2 தே. கரண்டி
* உப்பு – தேவையான அளவு
* மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி

தாளிப்பதற்கு :
* சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
* செத்தல் மிளகாய் – 3
* கடுகு – 1/2 தே. கரண்டி
* பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
* கறிவேப்பிலை – 1 நெட்டு

செய்முறை :
* உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.

* சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.

* உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.

* அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து 10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.

* புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.

* சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.

* தாளித்ததை தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )

* தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: தோசை மொறுமொறுப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி அல்லது சம்பா அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.

Check Also

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருள்கள்: பூண்டு – 1/4 கிலோ எலுமிச்சை சாறு -150 மில்லி நல்லெண்ணெய் – 150 மில்லி உப்பு …