Breaking News

சடலமாக மீட்கப்பட்டார் யாழ். பல்கலை மாணவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவியான கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த சேர்ந்த யதுர்ஷனா மகேந்திரன் (வயது – 21) நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் மல்லாகத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கி நின்று பல்கலைக்கழகத்தில் கற்று வந்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள வீட்டுக்கு நேற்றுச் சென்று வந்துள்ளார்.

மல்லாகத்தில் உள்ள இவரது வாடகை வீட்டில் நேற்று இரவாகியும் மின்குமிழ் ஒளிரவில்லை. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் குறித்த வீட்டினுள் சென்று பார்த்தபோது மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி புனித திரேஷா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவி உயர்தரப் பரீட்சையில் ‘3 ஏ’ சித்தி பெற்றவராவார்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …