Breaking News
முதல்வர் பழனிச்சாமி

முதல்வர் பழனிச்சாமி உடலுக்குள் ஜெயலலிதா ஆன்மா!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்து பணியாற்றுகிறதோ? என மூத்த அமைச்சர்கள் புகழாரம் சூடுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் பேசிய அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முதல்வர் பழனிச்சாமியை புகழந்து பேசினார்.

அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்து பணியாற்றுகிறதோ? என மூத்த அமைச்சர்கள் புகழாரம் சூடுவதாக வருவாய்த்துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அதேபோல் விழாவில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டு இயற்கைச் சீற்றங்களே அஞ்சி நடுங்குகின்றன என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஏன் பங்கேற்கவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …