Breaking News
ஜோ பைடன் 131, டிரம்ப் 92 இடங்களில் முன்னிலை

ஜோ பைடன் 131, டிரம்ப் 92 இடங்களில் முன்னிலை

ஜோ பைடன் 131, டிரம்ப் 92 இடங்களில் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரம் மாறி மாறி வெளியாகி வரும் சூழலில் டிரம்ப் 92 இடங்களிலும் ஜோ பைடன் 131 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

அதிபர் டிரம்ப் கென்டக்கி, இன்டியானா, ஒக்லாமா உள்ளிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்ஜியா, தெற்கு கரோலினா, ஆக்லாமோ, புளோரிடா போன்ற இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

ஜோ பைடன் அமெரிக்காவின் முக்கிய மாநிலமான நியு யார்க்கை கைப்பற்றியுள்ளார். வெர்மன்ட், நியுஜெர்சி, மேரிலாண்ட், இல்லியனோஸ் உள்ளிட்ட இடங்களிலும் பைடனின் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. டெக்ஸாஸ், ஒஹையோ, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளார் பைடன்.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 52,518 பேருக்கு கொரோனா தொற்று

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …