Breaking News
மகளுக்காக

மகளுக்காக ஓட்டு வேட்டையில் களமிறங்கிய அப்பா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகளுக்காக ஓட்டு சேகரிக்கும் பணியில் ‘காதல் கோட்டை’ இயக்குநர் அகத்தியன் களமிறங்கியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் ‘சென்னை 28’ நாயகியும், பிரபல இயக்குநர் அகத்தியனின் மகளுமான விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுத்ததால் இவரை பற்றி புரிந்துக் கொள்ள மக்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

ஆனால், அதற்குள் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே வந்த விஜயலக்ஷ்மி இறுதிப்போட்டி வரை செல்ல தகுதியில்லாதவர் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

எனினும், வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு உள்ளே வந்துள்ளதால் தனக்கு ஒவ்வொருவரது வீக் மற்றும் ஸ்ட்ராங் பாயிண்ட் குறித்து தெரியும் என நிதானமாக தனது ஆட்டத்தை தொடங்கினார்.

தற்போது இறுதி வாரத்துக்கான டாஸ்க் அனைவருக்கும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விஜி டாஸ்க்குகளை மேற்கொண்டு, மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் போட்டி கொடுத்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் விஜயலக்ஷ்மிக்கு ஓட்டு போட மக்களிடம் அவரது தந்தையும், ‘காதல் கோட்டை’ இயக்குநருமான அகத்தியன் தனது ஃபேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்து போஸ்ட் போட்டுள்ளார்.

ஒரு இயக்குநராக இல்லாமல் தந்தையாக எனது மகளுக்கு வாக்களிக்க கேட்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் என பதிவிட்டுள்ளார்.

இந்த வாரத்தின் எவிக்‌ஷனை வென்று இறுது வாரத்துக்கு விஜி முன்னேறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …