Breaking News
காஜல்

ஆபத்தான கிகி சேலஞ்ச்: இது காஜல் அகர்வால் வெர்ஷன்!

உயிருக்கு ஆபத்தான கிகி சேலஞ்ச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை காஜல் அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிகி டான்ஸ் சேலஞ்ச் இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. கனடா பாடகரின் ‘கிகி டூ யூ லவ் மீ’ என்ற ஆல்பம் பாடலுக்கு ஓடும் வாகனத்தில் (கார், ரயில், பைக்) இருந்து நடுரோட்டில் குதித்து டான்ஸ் ஆட வேண்டும்.

இதனை வாகனத்தில் உள்ள மற்றொருவர் வீடியோ எடுப்பார். பாடல் முடிந்தவுடன் அதே வாகனத்தில் மீண்டும் ஏறிக் கொள்ள வேண்டும் என்பதே ‘கிகி டான்ஸ் சேலஞ்ச்’ ஆகும்.

இது போன்ற ஆபத்தான விளையாட்டின் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு நேர்வதால், கிகி சேலஞ்சை யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும், மீறினால் கைது நடவடிக்கை பாயும் எனவும் இந்தியாவின் பல மாநிலங்களில் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் வித்தியாசமான முறையில் கிகி டான்ஸ் சேலஞ்சை ஏற்று, ஆபத்தான இந்த விளையாட்டில் யாரும் ஈடுப்பட வேண்டாம் என்பதை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தெலுங்கு ஹீரோ பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் வீல் சேரில் இருந்து இறங்கி நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

About அருள்

Check Also

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …