Breaking News
கலையரசன் பதவி துறப்பு..!

கலையரசன் பதவி துறப்பு..!

கலையரசன் பதவி துறப்பு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும் என்பதற்காக இராஜினாமாச் செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப்பிரதி நிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் த.தே.கூட்டமைப்பிற்குக் கிடைக்கப் பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனத்தை கலையரசனுக்கு வழங்கப்பட்டது

கடந்த 2006 இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நாவிதன்வெளி பிரதேசசபையில் போட்டியிட்டு உதவி தவிசாளராகத் தெரிவானார். பின்னர் 2008 இல் தவிசாளரானார்.

பின்னர் கிழக்குமாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடு தெரிவாகினார் பின்னர் மீண்டும் 2018 உள்ளுராட்சித்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தவிசாளரானார். அப்தவியை தற்போது இராஜிமாச் செய்துள்ளார்.

கடந்த 2015 பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இ.த.அ.கட்சி சார்பில் போட்டியிட்ட க.கோடீஸ்வரன் 17799 வாக்குகளைப்பெற்று தெரிவானார். அடுத்த அதிகூடிய 14723 வாக்குகளை கலையரசன் பெற்றதுடன் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடபோதும் ஒரு ஆசனத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

முதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்

About அருள்

Check Also

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது அமெரிக்காவில் வருகிற 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி குடியரசு …