Breaking News
பிக் பாஸ் வீட்டிற்குள் கமல்

பிக் பாஸ் வீட்டிற்குள் கமல்: மகிழ்ச்சியில் திளைத்த போட்டியாளர்கள்;சுவாரஸ்யமான தகவல்கள்!

விஸ்வரூபம்-2 படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் விதமாகத் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் கமல் ஹாசன்

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் கமல், அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் கமல் அதிக கவனம் செலுத்திவருகிறார்.ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்த கமல் இசையமைப்பாளர் ஜிப்ரான், ஸ்ருதிஹாசனுடன் இணைந்து படத்தின் பாடல்களை வெளியிட்டார். பூஜா குமார், ஆன்டிரியா, ஜிப்ரான் ஆகியோர் கடந்த வாரம் பிக் பாஸ் 2 தமிழ் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்கள் மத்தியில் படத்தின் பாடல்களைப் பாடி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்தி பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், கமல் கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘தஸ் கா தம்’ என்ற இந்தி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

இந்தி, தமிழைத் தொடர்ந்து, விஸ்வரூபம்-2 படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் விதமாகத் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் கமல். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கிவருகிறார்.

நேற்று வெளியான அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டுக்குள் கமல் சர்ப்ரைஸாக நுழைய, கமலைப் பார்த்ததும், போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

பின்னர் போட்டியாளர்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார் கமல். இப்படியாக விஸ்வரூபம் -2 படத்தின் புரமோஷன் பணிகளைப் படக்குழு மேற்கொண்டுவருவைத்து குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …