Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / ரஜினிகாந்த்துக்கு விருது! கமல்ஹாசன் விளக்கம்
பிரபல தனியார்

ரஜினிகாந்த்துக்கு விருது! கமல்ஹாசன் விளக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது கொடுப்பதை நான் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது கொடுத்துள்ளது ஒரே மாதிரியாகத் தான் பார்க்கிறேன். அரசியல் ரீதியாகவும் சரி நண்பர் என்ற ரீதியாகவும் சரி.

எனது தந்தை சிலையை நான் வேறு எங்கும் வைக்கவில்லை. எனது இல்லத்தில்தான் வைத்துள்ளேன். பொது இடத்தில் வைக்கவில்லையே. அது மட்டுமல்ல எனது தந்தையின் சிலை, வழிபாட்டு சிலை அல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் ரஜினிக்கு விருது கொடுத்தது தவறு இல்லை.

இருப்பினும் கூட கமல்ஹாசனுக்கும் கொடுத்திருக்கலாமே என்று சொல்லியுள்ளார் என்ற கேள்விக்கு தற்சமயம் ரஜினிகாந்த்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பின்னாடி எனக்கு வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் ஒரு லட்சம் திட்டங்களை தமிழக மக்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு லட்சம் என்பது வேறு திட்டங்கள் என்பது வேறு என்று தெரிவித்தார்.

இதையும் பாருங்க :

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மலர்ந்த மலர்கள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

மருத்துவமனை

கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா …