தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

இம்முறை ‘கோபேக் மோடி’ வேண்டாம்: கமல் வேண்டுகோள்

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் ’கோபேக்மோடி என்ற கோஷம் எழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகும்

ஆனால் இம்முறை பிரதமர் மோடி, சீன அதிபருடன் தமிழகத்துக்கு வருகை தர உள்ளதாக உள்ளதாலும், திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் பிர்தமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகைக்கு ஆதரவு அளித்துள்ளதாலும், ‘கோபேக் மோடி என்ற கோஷம் இருக்காது என்றே கருதப்படுகிறது

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மைய தலைவரும் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் கூறியதாவது: ’கோபேக் கோபேக்னு சொல்லி அவர் வரமாலே போய்விட்டால்… தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது.
சீன
நேர்மையான விமர்சனங்களை முன்வைப்போம். அதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வாரோ அப்படி ஏற்றுக்கொள்ளட்டும்’ என்றார்.

மேலும் இரண்டு நாட்டுத் தலைவர்கள் 60 வருடங்களுக்குப்பிறகு சந்திக்கின்றனர். சீனாவிலிருந்து அதிபர் வருகிறார்.

இருபெரும் தலைவர்களும், இரண்டு நாடுகளுக்கு நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்க முனைந்தாலும், அது வெற்றிபெற வேண்டும் என்று இந்தியராகவும், இந்திய – சீன உறவு மேம்பட வேண்டும் என்ற ஆசையுள்ளவனாகவும் இதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சீன அதிபரிடம் எங்கள் பிரதமர் முன்வைப்பார். அதைத் திறம்பட செய்ய வாழ்த்துகள்’ என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

முதல் பதிவிலேயே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா!

Tags
Show More

Related Articles

Back to top button
Close