முக்கிய செய்திகள்சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

ஆன்மீக அரசியல் வருகை, ‘2.0’ படத்தின் வெற்றி, ‘பேட்ட’ படத்திற்கு கிடைத்து வரும் எதிர்பார்ப்பு என இந்த ஆண்டு ரஜினிக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாளின்போது தவறாமல் வாழ்த்து கூறும் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய கமல்ஹாசன் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில், ‘என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனை போலவே ரஜினிக்கு அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 நீங்களும் வாழ்த்தலாம்

No comments to show.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close