தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

நீங்க முதல்ல ஜெயிச்சிட்டு பிறகு பேசுங்க – தமிழிசைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

தி.மு.கவின் வெற்றி நூல் இழையில் பெறப்பட்டதுதான் என்ற ரீதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதற்காக பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி.

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8414 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.

இதுகுறித்து பேசிய தமிழிசை “திமுகவினர் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

மேலும் திமுக-காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து வருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எம்.பி கனிமொழி “பாஜகவினர் முதலில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிட்டு பிறகு திமுகவின் வெற்றி குறித்து பேசட்டும்.

திமுக-காங்கிரஸ் உறவு மிகவும் சுமூகமாகவே உள்ளது.” என்று கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close