சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

ரசிகரின் செயலால் ஆடிப்போன கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட திரைப்படம் அற்புதமாக இருப்பதாக கூறிய ரசிகர் ஒருவர், திடீரென இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இரு படங்களுமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள, பேட்ட படம், பார்த்த ரசிகர்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது பழைய ரஜினியை பார்த்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பேட்ட திரைப்படம் குறித்து ரஜினி அண்மையில் அளித்த பேட்டியில், `ரசிகர்களுக்குப் பிடித்திருந்தால் மகிழ்ச்சி.

அவர்களை சந்தோஷப்படுத்துவே நம் வேலை. எல்லா புகழும் கார்த்திக் சுப்புராஜூக்குத் தான் சொந்தம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

நாடி நரம்பெல்லாம் ரஜினி வெறி ஓடிய ரசிகனால் தான் பேட்ட படத்தை இப்படி எடுத்து இருக்க முடியும் என ரஜினி ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை பாராட்டினார்கள.

இந்நிலையில் படத்தின் வரவேற்பு குறித்து அறிந்துகொள்ளத் திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களின் உற்சாகத்தைக் கண்டு களித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்க்கு வந்த கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கார்த்திக் சுப்புராஜை வரவேற்றார்.

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் 55 வயது ரசிகர் ஒருவர் கார்த்திக் சுப்புராஜின் காலில் விழுந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத இயக்குநர் அவரை கைதூக்கி எழப்பிவிட்டு, `என்ன அண்ண இப்படியெல்லாம்’ என்றார் கூறினார்.

இதையடுத்து அந்த ரசிகர், `என் தலைவனை நீ திருப்பி கொடுத்திட்டியே’ என்று நெகிழ்ந்தபடி நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வை திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close