Breaking News
கலைஞர் கருணாநிதி மரணம்

கலைஞர் கருணாநிதி மரணம்: முதல்வர், துணை முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி அஞ்சலில் செலுத்தினர்.

காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராஜாஜி ஹாலுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர்களுடம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …