Breaking News
வென்று வா தலைவா

”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா”; முழக்கம் சூரியனை எழுப்புமா?

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்களின் ”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா” என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென இன்று பின்னடைவை சந்தித்தது.

அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகம் பதற்றத்தில் தொற்றி கொண்டது.

அதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

காவேரியின் அறிக்கைக்கு பிறகு அம்மருத்துவமனை வாசலில் கூட்டம் அலை மோத ஆரம்பித்திருக்கிறது.

செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி கனிமொழி, அழகிரி என குடும்பத்தினர் காவேரியில் இருந்து கிளம்பி சென்ற பிறகு தென்கோடியில் இருக்கும் தொண்டரும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

அவருக்கு நினைவு தப்பியது, சிறுநீரகத்தில் தொற்று, என ஏராளமான தகவல்களை அவர்கள் கடந்து போனாலும், அவருக்கு மஞ்சள் காமாலை என்ற தகவலை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

கடந்த ஜூலை 27-ம் தேதியில் இருந்து காவேரியில் இருக்கும் கருணாநிதியை நினைத்து அத்தனை தொண்டர்களும் கவலையில் இருந்தனர்.

ஆனால் அத்தனையும் மீறி அவர் மீண்டு வர வேண்டும் என காவேரி கரையில் முழக்கமிட்டு அவரை மீட்டனர்.

தற்போது கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை என்று வெளியான தகவலால் அவர்கள் அனைவரும் முழக்கமிடுவது ”இயற்கையை வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா” என்பதுதான்.

கோபாலபுரத்தில் சூரியனுக்கு முன் உதயமாகிய இந்த சூரியன் எப்போதும் போல் காலை சூரியனுக்கு முன் உதிக்க வேண்டும் என காவேரி கரையில் தொண்டர்கள் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர் .

முழக்கம் வெல்லுமா? என பலர் கேள்வி எழுப்பி வரும் சூழலில், எங்கள் முழக்கம் காவேரி தடுப்புகளை தாண்டி சென்று அவரை எழுப்பும் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …