Tuesday , December 11 2018
Home / Headlines News / கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
கலைஞரின்

கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி தொடங்கியது.

காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, அண்டை மாநில முதல்வர்கள் என பல அரசியல் கட்சி தலைவர்களும், கோடிக்கணக்கான தொண்டர்களும், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்திய பின் முப்படை வீரர்கள் அணிவகுக்க கலைஞர் கருணாநிதியின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது குடும்பத்தினர் உட்பட தொண்டர்கள் கதறி அழுதனர். மேலும் தொண்டர்கள்`தலைவா, தலைவா’ என தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.

பெரியார் சிலை, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா நினைவிடம் நோக்கி செல்லும் இந்த இறுதி ஊர்வலத்தில் கோடிக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Check Also

2.0

சினிமா அசுர வசூல் வேட்டையில் ‘2.0’:ரூ.600 கோடி வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது. லைகா …