Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்
கருணாஸ்
கருணாஸ்

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சில தலைவர்கள் உருவாக்குகிறார்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.

ராமநாத மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 112 வ து ஜெயந்தி விழாவும் 57வது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளதால் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று சீமான் கூறியதாக அறிந்தேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அது ஒரு துரதிஷ்டமாக நடந்தது என்றுதான் கூறியிருக்கிறார்.

தமிழர்களின் உயிர்களை காவு வாங்குவதற்கு காரணமாக இருந்த காரணத்திற்காக ராஜிவ் காந்தியை கொலை செய்தது தாங்கள்தான் என்று அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

மேலும் பேசிய அவர், “போர்க்களத்தில் நிற்காதவர்கள், அங்கு என்ன நடந்தது என்று கூட தெரியாதவர்கள், உடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக தாங்கள்தான் முன்னின்று நடத்தியது போல தோற்றத்தை உருவாக்க தமிழகத்திலேயே சில தலைவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் .

நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது நல்லதல்ல . தியாகம் செய்து உயிர்நீத்த தியாகத்தை தன்னுடைய சுயநலத்துக்கு பயன்படுத்துவது என்பது அது மிகவும் கேவலமானது , கீழ்த்தரமானது.” என்றார்.

தாங்கள் தான் கொன்றோம் போன்ற கருத்துகளை சீமான் பகிர்வது நியாயம் இல்லை என்பது தன்னுடைய நிலைப்பாடு என கருணாஸ் தெரிவித்தார்.

இதையும் பாருங்க :

48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக

வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளனின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

நித்யானந்தா

ஆண் பக்தருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த நித்யானந்தா.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares ஈக்வடார் நாடு அருகே தனித்தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கி அதற்கு கைலாசநாடு என்று பெயர் வைத்திருப்பதாக …