Breaking News
கருணாநிதி

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் – காவேரி மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர்.

இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை நோய் வந்திருப்பதாகவும், அதற்கான மருந்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

இதனால் திமுக தொண்டர்கள் பெரும் மன வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில் கருணாநிதியின் உடல்நிலையில் காலை சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் திமுக தொண்டர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், காவேரி மருத்துவமனைக்கு திமுக தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமை காரணமாக கருணாநிதியின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன.

அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே கருணாநிதி உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும். அவருக்கு தீவிர கண்காணிப்புடன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதியின் உடல் ஒத்துழைக்கிறதா என்பது 24 மணி நேரத்திற்கு பின்பே தெரிய வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …