Breaking News

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

சீனாவின் உகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை 3,400க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் 90 நாடுகளுக்கும் அதிகமாகப் பரவியுள்ள கொரோனா வைரசால், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த உகான் நகரில் இருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியா திரும்பினர். அவர்களைப் பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டனர். அதில் சிலர் குணமடைந்து சென்றனர்.

இந்நிலையில் கேரளாவில் புதிதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இத்தாலியில் திரும்பிய 3 பேர் உட்பட பத்தினம் திட்டாவை சேர்ந்த 5 பேருக்கு கோரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனோ உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புள்ள 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். வெளி நாடுகளிலிருந்து வரும் மக்கள் பொறுப்பை உணர்ந்து கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …