Breaking News
கேரள கனமழை

கேரள கனமழை, வெள்ளம்: உதவி கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு-விவரம்

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உதவி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருவதால், கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும், 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலாவுடன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். யநாடு, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

இதையடுத்து, கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். வெள்ளத்தால் வீடுகள், விளை நிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உதவி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: திருவனந்தபுரம் – 04712730045; கொல்லம்- 04742794002; பத்தானம்திட்டா – 04682322515; ஆலப்புழா – 04812562201; இடுக்கி – 04862233111; எர்ணாகுளம் – 04842423513; திரிச்சூர் – 04872362424; பாலக்காடு – 04912505309

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …