Breaking News
கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன?

கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன?

கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன?

விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக குறித்த விமான முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதை பார்க்கும் போது விமான ஓடு தளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான ஓடு தளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்தால், இந்தளவிற்கு விமான இரண்டாக உடைந்திருக்காது என்று கூறப்படுகிறது.

கனமழை காரணமாக ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பை கொண்டது. விமான ஓடுதளம் உயரமான மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதை டேபிள் டாப் ரன்வே இவ்வாறு அழைப்பார்கள்.

கேரளாவில் உள்ள ஒரே டேபிள்டாப் ரன்வே கோழிக்கோடு விமான நிலையம் ஆகும்.இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் ஆகும். ஆனால் பொதுவாக 3 ஆயிரத்து 150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்தால் அதில் விமானத்தை தரையிறக்குவது சற்று கடிமான ஒன்றாகும்.கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

மேலும் விமான விபத்திற்கு முன் மூன்று முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. கோழிக்கூட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்க முயன்றுள்ளது.ஆனால், அதில் தரையிறங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28-ல் தரையிறங்க முயற்சித்துள்ளது.

அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

Today rasi palan – 09.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 09, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 26, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)   இன்றைய …