Breaking News

பொது வெளியில் தோன்றிய கிம் ஜான் உன்!

பொது வெளியில் தோன்றிய கிம் ஜான் உன்!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொது வெளியில் தோன்றியுள்ளார்.

கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11-ஆம் திகதிக்கு பின் பொது வெளியில் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை காரணமாக அவரால் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் தென்கொரியா அவர் ஆரோக்கியமாகவும், நலமுடனும் இருப்பதாகவும் கூறி வருகிறது. ஆனால் அவர் பொதுவெளியில் தென்படாத காரணத்தினால் பலத்த சந்தேகம் எழுந்து வந்தது.

இந்நிலையில் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டதாக, தென்கொரியா ஊடகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தெற்கு Pyongan மாகாணத்தில் உள்ள நகரமான Sunchon-ல் இருக்கும் ஒரு உரத் தொழிற்சாலையில் நிறைவு விழாவில் கலந்து கொண்டதாக Yonhap தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் அவரின் சகோதரி Kim Yo Jong-ம் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

அவர் இத்தனை நாட்கள் எங்கிருந்தார் என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை!கொரோனா வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை!

கொரோனா: எண்ணிக்கை 700 ஐ நெருங்கியது!கொரோனா: எண்ணிக்கை 700 ஐ நெருங்கியது!

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …