Breaking News
கோபி அன்னான்

நோபல் பரிசு பெற்ற ஐ.நா.சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைந்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் சுவிட்சர்லாந்தில் இன்று காலமானார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில் கடந்த ஏப்ரல் 8, 1938-ஆம் ஆண்டு அன்று பிறந்த இவர் இப்பதவியில் இருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார்.

கோபி அன்னான் அமைதிக்கான நோபல் விருது பெற்றுள்ளார். பதவி ஓய்வுக்கு பின்னர் சிரியாவிற்கான ஐ.நா.அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்து வந்தார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான் (80) உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …