இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்

வரலாற்றுச் சாதனையைத் தக்க வைத்துள்ள சங்கா!

- ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்

வரலாற்றுச் சாதனையைத் தக்க வைத்துள்ள சங்கா!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனை இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககார வசமே இன்னும் உள்ளது தெரியவந்துள்ளது.

ஒருநாள், டெஸ்ட், ரி – 20 கிரிக்கெட் என அனைத்தும் விதமான போட்டிகளிலும் சேர்த்து சங்ககார கடந்த 2014ஆம் ஆண்டில் மொத்தமாக 2868 ஓட்டங்கள் குவித்தார். இந்தச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

2019ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் யாரும் இந்த ஓட்டங்களை முறியடிக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் ரிக்கி பொண்டிங் 2833 ஓட்டங்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 2005ஆம் ஆண்டு இந்த ஓட்டகளை எடுத்துள்ளார்.

விராட் கோஹ்லி 2017ஆம் ஆண்டு 2818 ஓட்டங்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் நான்காவது இடமும் விராட்கோஹ்லி வசமே உள்ளது. அவர் கடந்த 2018ஆம் ஆண்டு 2735 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் பட்டியலில் நான்காம் இடத்திலும் அவர் பெயரே உள்ளது.

நிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது

அமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close